ககர்நாடக, தமிழக மக்கள் அமைதி காக்க வேண்டும்: மோடி வேண்டுகோள்

modiகாவிரி விவகாரத்தில் கர்நாடக, தமிழக மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், காவிரி விவகாரத்தில் இரு மாநில பொதுமக்களும் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். காவிரி விவகாரத்தை முன்வைத்து ஏற்பட்டுள்ள வன்முறையால் தனிப்பட்ட முறையில் வலியை உணர்கிறேன். உணர்வுப் பூர்வமான விவகாரத்தில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது வேதனையை அளிக்கிறது. 2 நாட்களாக அரங்கேறி வரும் வன்முறை மற்றும் தீ வைப்பு சம்பவங்களால் ஏழைகள்தான் பாதிக்கப்பட்டுள்ளனர். எந்த ஒரு பிரச்சனைக்கும் வன்முறை தீர்வாகாது. ஜனநாயகத்தில் பேச்சுவார்த்தை மூலமே பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். காவிரி விவாரத்தில் சட்டத்தை மீறி தீர்ப்பு என்பது இயலாத காரியம் என்று கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply