ஜெர்மனியில் சிரியாவை சேர்ந்த 3 பேர் கைது: ஐ.எஸ். அமைப்பினரால் அனுப்பப்பட்டவர்கள் என தகவல்

german-special-police-commandos-arrive-at-the-scene-to-search-for-an-picture-id89852907சிரியா நாட்டின் சலேச்விச் ஹோல்ஸ்டெயின் மாகாணத்தை சேர்ந்த 3 பேர் ஜெர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 17–26 வயதுக்கு உட்பட்டோர் ஆவர். இவர்கள் கடந்த நவம்பர் மாதம் ஜெர்மனிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஜெர்மனியில் தாக்குதல் நடத்துவதற்காகவோ அல்லது அங்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அடுத்த உத்தரவு பிறப்பிக்கிறவரை காத்திருப்பதற்காகவோ ஐ.எஸ். அமைப்பினரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜெர்மனி அரசு வக்கீல்கள் கூறினர்.

 

இது தொடர்பாக ஜெர்மனி அரசு வக்கீல்கள் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘எங்கு, எப்போது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர் என்பது தெளிவாக தெரியவில்லை. இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் இது தொடர்பான உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை’’ என கூறினர்.

 

ஜெர்மனியில் கடந்த ஆண்டு ஏறத்தாழ 5 லட்சம் பேர் அகதிகளாக சென்று தஞ்சம் புகுந்திருப்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் அங்கு நடத்தப்பட்ட தாக்குதல்களில் மூன்று சம்பவங்கள், இப்படி தஞ்சம் புகுந்தவர்களால்தான் நடத்தப்பட்டுள்ளது என்பது கவலையை ஏற்படுத்தி உள்ளது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply