நைஜர் நாட்டில் பயங்கரவாதிகள், ராணுவம் கடும் மோதல் 35 பேர் பலி

nighaநைஜீரியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிற போகோஹரம் பயங்கரவாத அமைப்பினர், அங்கு ஒரு மத அடிப்படையிலான அரசை அமைப்பதற்காக ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றனர். அவர்கள் நைஜீரியாவின் அண்டை நாடான நைஜரிலும் கால் பதித்துள்ளனர். அங்கும் அவர்கள் வன்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்த நிலையில் அந்த நாட்டின் தென்கிழக்கு பகுதியான டிபாவில் டாவ்மார் என்ற கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவத்தினர் மீது சம்பவத்தன்று போகோஹரம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். உடனே ராணுவ வீரர்கள் எதிர் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே கடும் சண்டை நடந்தது.  இந்த சண்டையின்போது 5 ராணுவ வீரர்கள் பலியாகினர். 30 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். இந்த மோதல் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply