18 காரட் தங்கத்திலான கழிப்பறை நியுயார்க்கில் திறப்பு !

toiletநியு யார்க் நகரின் குகென்ஹெய்ம் அருங்காட்சியகத்தில் திறக்கப்பட்டுள்ள தங்கக் கழிப்பறை பொதுமக்கள் பாவனைக்குத் திறந்துவிடப்பட்டிருக்கிறது.’ அமெரிக்கா’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த முழுமையாக இயங்கும் 18 காரட் தங்கத்திலானா கழிப்பறையை இத்தாலியக் கலைஞரும் சிற்பியுமான மௌரிஸியோ கேட்டெலான் உருவாக்கியுள்ளார்.

குகென்ஹெய்ம் அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் குளியலறைகள் ஒன்றினில் வைக்கப்பட்டிருக்கும் இந்த தங்கக் கழிப்பறை முழுமையாக பயன்படுத்தப்படக்கூடியதே என்று நியு யார்க்கர் சஞ்சிகை கூறுகிறது.

இந்தப் படைப்பை “துணிச்சலான,மதிக்காத” படைப்பு என்று வர்ணிக்கிறது இந்த அருங்காட்சியகம்.

சாதாரண பீங்கானால் செய்யப்பட்ட , ஒரு நபர் மட்டுமே பயன்படுததக்கூடிய, கழிப்பறை ஒன்றில், பீங்கான் கழிப்பிடம் இருந்த இடததில், இந்த தங்கக் கழிப்பிட இருக்கை வைக்கப்பட்டுள்து.

அருங்காட்சியகத்துக்குள் வர நுழைவுக் கட்டணம் செலுத்தும் எவரும் இந்தக் கழிப்பறையை அவர்கள் விருப்பப்படி பயன்படுத்திக்கொள்ள முடியும்.இதை பார்வையாளர்கள் தனிப்பட்ட முறையிலும், அந்தரங்கமான வகையிலும் பயன்படுத்த முடிவது என்பது ஒரு கலைப் படைப்பை முன்னெப்போதும் கண்டிரத வகையில் மிகவும் நெருக்கமாக பார்க்கும் அனுபவத்தைப் பார்வையாளர்களுக்குத் தரும் , என்கிறது குகென்ஹெய்ம் அருங்காட்சியகம்.

இத்தாலியில் மிலன் நகரில் வசிக்கும் கலைஞரும், ஒரு ட்ரக் ஓட்டுநரின் மகனுமான , கேட்டலான், இந்தப் படைப்பு பொருளாதார சமத்துவமின்மையால் உந்தப்பட்டது என்று இந்த ஆண்டு முன்னதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இந்தக் காட்சிப் படைப்பு, 1917ல் , மார்சல் டுஷாம்ப் என்ற கலைஞர் அவரது பரிசோதனைப் படைப்பான “பவுண்டன்” என்ற பெயரிடப்பட்ட பீங்கானால் செய்யப்பட்ட சிறுநீர்க் கழிப்பிடத்தைக் காட்சிக்கு வைத்த போது ஏற்பட்ட பரபரப்புடன் ஒப்புமை காட்டி பேசப்படுகிறது.

இந்த தங்கக் கழிப்பிடத்தை உருவாக்கிய கலைஞர் கேட்டலானுக்கு 55 வயது. போப்பாண்டவர் இரண்டாம் ஜான் பால் விண்கல் ஒன்றால் தாக்கப்பட்டு விழுவது போன்ற ஒரு காட்சியைக் காட்டும் ” லா நோனா ஒரா” ( ஒன்பதாவது மணி நேரம்) போன்ற சர்ச்சைக்குரிய சிற்பங்களை வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படைப்பு ” மானுட குலம் பகிர்ந்து கொள்ளும் தவிர்க்க முடியாத உடல் ரீதியான யதார்த்தங்களை நமக்கு ஞாபகப்படுத்துகிறது” என்று குகென்ஹெய்ம் அருங்காட்சியகம் கூறியது.

இந்தக் காட்சிப் படைப்பு, உலக மக்கள் தொகையில் “ஒரு சதவீதத்தினருக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய ஒரு அசாதாரணமான ஆடம்பரப் பொருளை பொதுமக்களுக்கும் கிடைக்கும்படி செய்யும் நோக்கிலானது” , என்று அருங்காட்சியகம் கூறுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply