டிரம்ப் உழைக்கும் மக்களின் நண்பன் அல்ல: ஒபாமா குற்றச்சாட்டு

obamaஅமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8-ந் தேதி நடக்கிறது. அதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக முன்னாள் வெளியுறவு துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுகிறார். குடியரசுக் கட்சி சார்பில் வேட்பாளராக தொழிலதிபர் டிரம்ப் உள்ளார்.இந்த தேர்தலில் ஹிலாரிக்கு ஆதரவாக தற்போதைய அதிபர் பராக் ஒபாமா பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

பிலடெல்பியா மாகாணத்தில் இன்று பேசிய ஒபாமா, குடியரசுக் கட்சி வேட்பாளர் டிரம்ப் உழைக்கும் மக்களின் நண்பன் அல்ல என்று கூறியுள்ளார்.

‘உழைக்கும் மக்கள் மீது எந்தவொரு கவலையும் இல்லாமல் இந்த பூமியில் 70 ஆண்டு காலம் வாழ்ந்தவர் டிரம்ப். தனது வாழ்வின் பெரும்பகுதி நேரத்தை உழைக்கும் மக்களிடம் இருந்து விலகியே அவர் இருந்துள்ளார். டிரம்ப் உங்களை அவரது கோல்ப் மைதானத்தில் அனுமதித்து வந்ததில்லை’ என்றார் ஒபாமா.

இதனிடையே, நிமோனியா காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்ற பின்னர் குணமடைந்த ஹிலாரி கிளிண்டன் இன்று வடக்கு கரோலினா மாநிலத்தில் தனது தேர்தல் பிரச்சாரத்தை மீண்டும் தொடங்குகிறார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply