ஜெட்லியை விட சிறந்த நிதி மந்திரியாக என்னால் செயல்பட முடியும்: சுப்பிரமணிய சாமி

supramaniபா.ஜனதா தலைவர்களில் ஒருவரான அருண் ஜெட்லி, மத்திய நிதி மந்திரியாக பதவி வகித்து வருகிறார். இவருக்கும், கட்சியின் மற்றொரு மூத்த தலைவரான சுப்பிரமணிய சாமிக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனை, சுப்பிரமணிய சாமி இடைவிடாமல் விமர்சித்ததற்கு, ஜெட்லி மீதான பகையே காரணம் எனவும் கூறப்பட்டது.

இந்த பகை நேற்று வெளிப்படையாக வெடித்தது. நிதி மந்திரி பதவியில் ஜெட்லியை விட தன்னால் சிறப்பாக செயல்பட முடியும் என சுப்பிரமணிய சாமி வெளிப்படையாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

டெல்லியில் ‘இந்தியா டுடே’ சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த போது கூறுகையில், ‘நான் ஒரு பொருளாதார நிபுணர். அவர் (ஜெட்லி) ஒரு வக்கீல். அப்படியிருக்கும் போது அவரால் எப்படி என்னை விட சிறப்பாக செயல்பட முடியும்?’ என்று கேள்வி எழுப்பினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply