மீண்டும் உலக வங்கி தலைவர் ஆகிறார் ஜிம் யோங் கிம்?
உலக வங்கித் தலைவர் பதவிக்கு வேறு யாரும் விண்ணப்பிக்காத நிலையில் மீண்டும் 2-ஆவது முறையாக உலக வங்கி தலைவராக ஜிம் யோங் கிம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.உலக வங்கித் தலைவராக ஜிம் யோங் கிம் (56) 2012-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் வரும் 2017 ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடைகிறது. ஆனால் அவருக்குப் போட்டியாக இதுவரை யாரும் விண்ணப்பிக்கவில்லை. இந்நிலையில்
உலக வங்கித் தலைவர் பதவிக்கு மீண்டும் ஜிம் யோங் கிம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இது குறித்து உலக வங்கி நிர்வாகக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
உலக வங்கித் தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடு புதன்கிழமையோடு நிறைவடைந்தது. இதையடுத்து, உலக வங்கி தேர்தல் விதிமுறைகளின்படி, ஜிம் யோங் கிம்மே மீண்டும் 2-ஆவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இதற்கான பணிகள் அக்டோபர் 7-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடைபெறும் உலக வங்கியின் ஆண்டுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஜிம் யோங் கிம்கொரிய-அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார். உலக நாடுகளிடையே நிலவி வரும் வறுமையைக் குறைக்கும் பல்வேறு திட்டங்களுக்கு முன்னுரிமை தந்து செயலாற்றியவர். இதனால், உலக வங்கியின் முக்கிய பங்குதாரர்களான அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, சீனா உள்ளிட்ட நாடுகளின் பேராதரவு இருக்கிறது.
இரண்டாவது உலகப் போருக்கு பின்னர், உலக வங்கி உருவாக்கப்பட்டதிலிருந்து, உலக வங்கியின் தலைவராக அமெரிக்கர்களே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply