ராம்குமார் உடலுக்கு பிரேதப் பரிசோதனை செய்ய மதியம் வரை தடை

ramசென்னையை சேர்ந்த ஸ்வாதி என்ற இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்டு, புழல் சிறையில் நேற்று தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் ராம்குமார் உடலுக்கு மதியம் வரை பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டாம் என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.புழல் சிறையில் நேற்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ராம்குமார், ராயப்பேட்டை மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டபோது இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு இன்று பிரேதப் பரிசோதனை நடக்குமென எதிர்பார்க்கப்பட்டது.இந்த நிலையில் இன்று காலையில் விஜயேந்திரன் என்ற வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நான்காவது அமர்வு முன்பாக ஆட்கொண்டர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அதனை விசாரிக்க மறுத்த நான்காவது அமர்வு, வழக்கை தலைமை நீதிபதியிடம் எடுத்துச் செல்லும்படி கூறியது. தலைமை நீதிபதி இதனை வழக்காக தாக்கல் செய்யும்படி தெரிவித்தார்.

அதன் பிறகு வழக்கறிஞர் சங்கரசுப்பு உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சிவஞானத்தின் நீதிமன்றத்தில், ராம்குமார் இறந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டுமெனக் கோரினார். அதுவரை அவரது உடலுக்கு பிரேதப் பரிசோதனை நடத்தக்கூடாது என்றும் கோரினார். பிரேதப் பரிசோதனை நடத்தப்படும்போது தங்களது தரப்பு மருத்துவர் ஒருவர் உடனிருக்க வேண்டுமென்றும் அவர் கோரினார்.

இதை விசாரித்த நீதிபதி சிவஞானம், மதியம் 2.15 மணியளவில் இந்த வழக்கை விசாரிப்பதாகத் தெரிவித்தார். அதுவரை ராம்குமாரின் உடலுக்கு பிரேதப் பரிசோதனை நடத்தக்கூடாது என்றும் நீதிபதி கூறினார்.

அப்போது ஆஜரான அரசுத் தரப்பு வழக்கறிஞர், இதனை ஏற்பதாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதனைத் தெரிவித்துவிடுவதாகவும் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply