காஷ்மீர் பிரச்சனையில் தலையிடுங்கள்: ஜான் கெர்ரியிடம் நவாஸ் ஷெரீப் வலியுறுத்தல்
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பொதுசபை கூட்டம் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்கா சென்றுள்ள ஷெரீப் அந்நாட்டு வெளியுறவுத் துறை செயலாளர் ஜான் கெர்ரி மற்றும் நியூசிலாந்து பிரதமர் ஆகியோரை சந்தித்துள்ளதாக ஐ.நா.விற்கான பாகிஸ்தான் தூதர் மலீகா லோதி தனது டுவிட்டர் வலைதளத்தில் கூறியுள்ளார்.
ஜான் கெர்ரி உடனான சந்திப்பின் போது, காஷ்மீர் பிரச்சனையில் அமைதியான தீர்வு கிடைக்க அமெரிக்கா தலையிட வேண்டும் என்று நவாஸ் ஷெரீப் வலியுறுத்தினார்.
இந்த சந்திப்பின் போது பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சனைகள் குறித்து விவாதித்தனர். பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் வெளியுறவுத் துறை ஆலோசகர் சர்தாஜ் அஜிஷ், வெளியுறவுத் துறை செயலாளார் அய்ஜாஸ் அகமது சவுத்ரி ஆகியோர் இந்த சந்திப்பின் போது உடன் இருந்தனர்.
முன்னதாக, காஷ்மீர் மாநில உரி தீவிரவாத தாக்குதல் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பிரதமர் நவாஸ் ஷெரீப் பதில் அளிக்க மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply