பொலிஸ் நியமனங்களில் தமிழ் பேசுவோருக்கு 25 வீத ஒதுக்கீடு

colsagala162648801_4781505_19092016_mfm_cmyநாட்டில் எதிர்வரும்நான்கு ஆண்டுகளில் புதிதாக இணைக்கப்படும் பொலிசாரில் 25 வீதமானவர்கள் தமிழ் பேசுபவர்களாக இருப்பர் என சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார். யாழ். மாவட்டச் செயலகத்தில் நேற்று முன்தினம்(18) இடம்பெற்ற ‘குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்’ தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டபின் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:

 

இன்றைய கலந்துரையாடலில் போதைப்பொருள் தடுப்பு, சட்ட விரோத செயல்பாடுகள், தமிழ்மொழிபேசும் பொலிசாரின் நியமனம், பொலிஸ் நிலையங்கள் அமைத்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. ஒரு தவறு இடம்பெற்ற பின்பு காரணத்தைக் கண்டறிவதை விடவும் அதனை இடம்பெறாமல் தடுப்பதே சிறந்தது. இதன் பிரகாரமே குறித்த ஏற்பாடுகள்

 

இன்று கலந்துரையாடப்பட்டன. இதன் பெறுபேறுகள் தொடர்பில் ஆராயும் நோக்கில் இரு மாதங்களில் அடுத்த கலந்துரையாடல் இடம்பெறும். பொலிசாருக்கு எதிராக இனிவரும் காலங்களில் எந்த முறைப்பாடும் இருக்கக் கூடாது. மண் , மரம் கடத்தல் தொடர்பான சட்டவிரோத செயல்களை தடுக்க வேண்டும் எனவும் பொலிஸாருக்கு பணிக்கப்பட்டுள்ளது. இதேவேளை தமிழ் மொழிபேசும் பொலிசார் விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.எதிர்வரும் 4 ஆண்டுகளில் புதிதாக இணைக்கப்படும் பொலிசாரில் 25 வீதமானவர்கள் தமிழ் பேசுபவர்களாகவே இருப்பர்.

 

மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை.சோ.சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன், சாள்ஸ் நிர்மலநாதன் உட்படப் பலரும் கலந்து கொண்டனர்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply