அரசாங்கத்துக்கு இன்னும் சிந்திக்க காலம் இருக்கின்றது : மஹிந்த

mahindaநாட்டு பொது மக்களுக்களின் வாழ்க்கைக்கு நெருக்கடி கொடுக்கும் வற் வரி அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கத்துக்கு இன்னும் சிந்தித்துத் தீர்மானம் எடுப்பதற்கு காலம் இருக்கின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொருட்களின் விலை அதிகரிக்கும் என தெரிந்த நிலையில் வற் வரியையும் அதிகரிக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது. இந்த விடயத்தில் தங்களுக்கு எந்தவிதத்திலும் உடன்பாடு இல்லை. உலகின் சகல பாகங்களிலும் பொருட்களின் விலை குறைந்து காணப்படினும், இந்த அதிகரித்த வற் வரியின் காரணமாக நாட்டில் பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் புதிய வற் வரி தொடர்பில் கூட்டு எதிர்க் கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் கருத்து வெளியிடுகையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply