இந்தியாவிற்காக சீக்கியர்களை வேவு பார்த்த ஜெர்மனி அதிகாரி கைது
இந்தியாவிற்காக சீக்கியர்களை வேவு பார்த்த ஜெர்மனி நாட்டை சேர்ந்த 58 வயதான குடியேற்ற அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். வேவு பார்த்தல் மற்றும் தொழில்முறை இரகசிய காப்பு விதிகளை மீறியது உள்ளிட்ட பிரிவுகளில் சுமார் 45 வழக்குகளில் இவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. ஜெர்மனியின் மேற்கு ஓஸ்ட்வெஸ்ட்பாலன் நகரில் உள்ள குடியேற்ற அலுவலகத்தில் பணி புரிந்து கொண்டிருந்த அந்த அதிகாரி கடந்த பிப்ரவரி மாதம் 17-ம் தேதி வடக்கு ரைன் -வெஸ்ட்பாலியா நகரில் இவர் பிடிபட்டார். அப்பொழுது முதல் இவர் போலீஸ் விசாரணையில் இருந்து வந்தார்.
ஜெர்மனி சட்டத்தின் படி வேவு பார்த்தல் குற்றச்சாட்டிற்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply