அகதிகள் வெளியேறுவதை தடுக்க பிரான்சில் சுவர் கட்டும் பணி தொடங்கியது
பிரான்சின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள கலாயிஸ் அகதிகள் முகாமில் இருந்து வெளியேறி பிரிட்டனுக்குள் சட்டவிரோதமாக அகதிகள் நுழைவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து இருநாடுகளும் செய்துகொண்ட உடன்படிக்கையின்படி குறிப்பிட்ட முகாமில் இருந்து அகதிகள் எவரும் பிரிட்டனுக்குள் நுழையாதபடி இரு நாடுகளும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
இதன் ஒருபகுதியாக பிரிட்டன் சார்பில் சுமார் 2 மில்லியன் பவுண்ட் மதிப்பில் ஒரு மைல் நீளம் கொண்ட சுவர் ஒன்றை எழுப்ப இரு நாடுகளும் முடிவு செய்தன. அதன்படி, அகதிகள் முகாமிற்கு அருகில் சுவர் கட்டும் பணி தொடங்கியது.
வடக்கு பிரான்சில் உள்ள துறைமுகத்திற்கு செல்லக்கூடிய பிரதான சாலையின் இருபுறமும் 4 மீட்டர் உயரத்தில் சுவர் கட்டப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் பணி முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply