சிரியாவில் உதவிப்பொருட்களுடன் சென்ற வாகனங்கள் மீது தாக்குதல்: ரஷியாவை குற்றம் சாட்டுகிறது, அமெரிக்கா

siriyaசிரியாவில் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், அலெப்போ நகர் அருகே உதவிப்பொருட்கள் ஏற்றி வந்த வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த 12 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுபற்றி அமெரிக்கா கருத்து தெரிவிக்கையில், ‘‘இது மிகப்பெரிய மனித துயரம்’’ என கூறியது.

 

இந்த தாக்குதல்களை ரஷியாவின் 2 விமானங்கள்தான் நடத்தி உள்ளன என அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.

 

இதுபற்றி வாஷிங்டன் வெள்ளை மாளிகை துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பென் ரோட்ஸ் கூறும்போது, ‘‘சிரியாவில் உதவிப்பொருட்கள் ஏற்றிச்சென்ற வாகனங்கள் மீதான தாக்குதலுக்கு ரஷியாதான் பொறுப்பு என்று கூறுகிறோம். சிரியாவில் போர் நிறுத்தம் தொடர வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் நிலைப்பாடு. ஆனால் இதில் ரஷியாவின் செயல்பாடு, கவலை அளிக்கத்தக்கதாக அமைந்துள்ளது’’ என்றார்.

 

ஆனால் ரஷியா இதை மறுத்துள்ளது. ‘‘சிரியாவில் நடைபெற்றது வான்தாக்குதல் அல்ல, தீ விபத்தே அன்றி குண்டு வீச்சு அல்ல’’ என ரஷியா கூறி உள்ளது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply