காங்கோ ஜனநாயக குடியரசில் தொடரும் போராட்டங்கள்: அதிகரிக்கும் உயிரிழப்புகள்

gangoகடந்த மூன்று நாட்களாக நடந்து வரும் அரசு எதிர்ப்பு போராட்டங்களினால், கிட்டத்தட்ட நூறு பேர் கொல்லப்பட்டுள்ளதாக காங்கோ ஜனநாயக குடியரசின் எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்த சில தகவல் ஆதாரங்கள், உயிரிழப்பு எண்ணிக்கை கிட்டத்தட்ட 40 வரை இருக்கும் என்று தெரிவித்துள்ளன. அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ள காங்கோ ஜனநாயக குடியரசின் அதிபர் ஜோசப் கபிலா, போராட்டக் குழு தலைவர்கள் ரத்த களறியான கலவரத்தை தூண்டி விடுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

 

காங்கோ ஜனநாயக குடியரசில் நடக்கவிருந்த அதிபர் தேர்தலை ஒத்திவைத்தது தொடர்பாக அமைதியாக நடைபெற்ற போராட்டங்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாக பாதுகாப்பது படையினர் மீது எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply