அமைச்சர் பொன்சேகாவால் நாடாளுமன்றில் அமளி
கடந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பல ஊழல் மோசடிகள் குறித்து நாடாளுமன்றில் தெரிவித்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, சர்ச்சைக்குரிய அவன்ட் கார்ட் விவகாரம் தொடர்பான புகைப்படமொன்றையும் வெளியிட்டதைத் தொடர்ந்து சபையில் கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.நேற்று (புதன்கிழமை) கூடிய நாடாளுமன்ற அமர்வில், சுயாதீன ஆணைக்குழுக்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் சம்பள கொடுப்பனவுகள் தொடர்பில் பிரதமர் ரணில் முன்வைத்த பிரேரணை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய சரத் பொன்சேகா கடந்த ஆட்சியை கடுமையாக விமர்சித்தார்.
கடந்த காலத்தில் மிகவும் மோசமான ஆட்சியே முன்னெடுக்கப்பட்டதென குறிப்பிட்ட சரத் பொன்சேகா, அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களே சிறையில் அடைக்கப்பட்டார்கள் எனக் குறிப்பிட்டார்.
அத்தோடு, கடந்த காலத்தில் பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெற்றதாக கருதப்படும் அவன்ட் கார்ட் நிறுவனம் தொடர்பான புகைப்படமொன்றையும் வெளியிட்டதைத் தொடர்ந்து எதிரணியினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். குறித்த புகைப்படத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உள்ளதாக சரத் பொன்சேகா தெரிவித்ததையடுத்து, அவன்ட் கார்ட் தொடர்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதால் எவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை குறிப்பிடலாமென ஒழுங்குப் பிரச்சினைகளையும் எழுப்பினர். அத்தோடு,சரத்பொன்சேகா குறிப்பிட்டவிடயங்களை ஹன்சாட்டிலிருந்து நீக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்ட னர்.
இதனையடுத்து சபையை அமைதிப்படுத்திய பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால, நாடாளுமன்ற நிலையியல் கட்டளைக்கு முரணான விடயங்கள் ஹன்சாட்டில் இருந்து நீக்கப்படுமென தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply