மர்ம வாகனத்தால் பீதி: மக்கள் வெளியேற்றம் – நியூயார்க் விமான நிலையத்தில் பரபரப்பு
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள லாகார்டியா விமான நிலையத்தின் ‘பி’ முனையத்தில் உள்ளூர் நேரப்படி நேற்றிரவு சுமார் 11 மணியளவில் பாதுகாப்பு படையினருக்கு ஒரு அவசர அழைப்பு வந்தது.அப்பகுதிக்குள் ஒருவர் நிறுத்திவைத்த வாகனம் எடுக்கப்படாமல் வெகுநேரமாக கேட்பாரற்று கிடப்பதாக வந்த தகவலையடுத்து, விமான நிலையத்துக்குள் இருந்த அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். அங்கு விமானங்கள் தரையிறங்கவும், அங்கிருந்து புறப்பட்டு செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டது.
மோப்ப நாய்களுடன் விரைந்துவந்த வெடிகுண்டு நிபுணர்கள் அந்த வாகனத்தை முழுமையாக பரிசோதித்த பின்னர், அதில் ஆபத்து விளைவிக்கக்கூடிய எந்த பொருளும் இல்லை என்பது தெரியவந்தது. அதன்பின்னர், பின்னிரவு 12.30 மணியளவில் மீண்டும் விமான நிலையம் திறக்கப்பட்டது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply