சிகிச்சை பெற்று வரும் முதல்வரை நேரில் சந்தித்த அமைச்சர்கள்
உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அ.தி.மு.க அமைச்சர்கள் நேரில் சென்று பார்த்தனர்.தமிழக முதல்வரும், அ.தி.மு.கவின் பொது செயலாளருமான ஜெயலலிதா நேற்று வியாழன் இரவு சரியாக 10.15 மணிக்கு சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பின், தமிழக முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் உடலில் நீர் சத்து குறைந்ததன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், தற்போது அவர் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் அப்போலோ மருத்துவமனை தரப்பு விளக்கமளித்தது.
மருத்துவமனையில் குவிந்த தொண்டர்கள்
இச்சூழலில், செய்தியை அறிந்து அப்போலோ மருத்துவனையில் நள்ளிரவு முதல் அ.தி.மு.க தொண்டர்கள், அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மருத்துவமனை அமைந்துள்ள க்ரீம்ஸ் சாலையில் குவியத் தொடங்கினார். இதனால், மருத்துவமனைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.
மூடப்பட்ட க்ரீம்ஸ் சாலை
இன்றைய தினம் அதிகாலையில் இருந்தே தொண்டர்கள் அப்போலோ மருத்துவமனையை நோக்கி வரத் தொடங்கியதால் அண்ணா சாலை முதல் நுங்கம்பாக்கம் வரை க்ரீம்ஸ் சாலை மொத்தமாக மூடப்பட்டது. இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதசாரிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களுக்கு முதலில் அனுமதி
நேற்றைய தினம் இரவு சுமார் 10.15 மணியளவில் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. அதனைத் தொடர்ந்து, அவரை சந்திக்க சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள் என யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இந்த நிலையில், இன்று காலை 10.30 மணியளவில் முதன் முதலாக ஜெயலலிதாவை சந்திக்க அமைச்சர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிதித்துறை அமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் முதல்வரை சந்திக்க சென்றிருக்கிறார். பின்னர், சற்று நேரத்தில் அவர்கள் திரும்பியுள்ளார். சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. முன்னாள் அமைச்சர்கள் பலரும் மருத்துவமனை வாசலில் கவலை தெய்ந்த முகத்துடன் தொண்டர்களுடன் காத்து கிடக்கிறார்கள்.
இரண்டாம் மாடியில் ஜெயலலிதா
அப்போலோ மருத்துவமனையின் இரண்டாம் தளத்தில் உள்ள சிறப்பு வார்டில் ஜெயலிதாவுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக மருத்துவ வட்டாரங்கள் கூறுகின்றன. மருத்துவமனையின் உள்ளேவும், வெளியேவும் தீவிர போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மருத்துவமனை ஊழியர்கள் தீவிர சோதனைகளுக்கு பிறகே உள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply