ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கம்
ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் நீதிமன்றத்தின் உயர் நிலை அதிகாரியொருவர் தீர்மானித்துள்ளார்.தமிழீழ விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கு உரிய காரணங்களை முன்வைக்க ஐரோப்பிய ஒன்றியம் தவறிவிட்டதாகத் தெரிவித்து 2014 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் தடையை நீக்குமாறு உத்தரவிட்டிருந்தது.
எனினும் இந்தத் தடை நீக்க உத்தரவை மேன்முறையீடு செய்திருந்த ஐரோப்பிய ஒன்றியம் தடையை நீடிப்பதற்கு முன்வைத்த காரணங்கள் திருப்திகரமாக அமையாததால் மேன்முறையீட்டை இரத்துச் செய்ய ஐரோப்பிய நீதிமன்றத்தின் உயர்நிலை ஆலோசகரான எலோனோ சாக்ஸ்டன் தீர்மானித்துள்ளார்.
இதற்கமைய ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் 28 நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதற்கும் அவர் தீர்மானித்துள்ளார். எனினும் இதனை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அந்தந்த நாடுகள் தனித்து இந்தத் தடை தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளலாம். எவ்வாறாயினும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அதன் உயர் நீதிமன்றத்தில் வழங்கும் தீர்மானங்களை முழுமையாக ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துவதே இதுவரை வழமையான நடைமுறையாக இருந்து வருகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் பாலஸ்தீனத்தின் விடுதலை இயக்கமான ஹமாஸ் இயக்கம் மீதான தடையும் நீக்கப்படவுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply