பிரதமர் மோடிக்கு சித்தராமையா கடிதம்: சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அவமதிக்கும் நோக்கம் கர்நாடக அரசுக்கு இல்லை

sitharaசுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் கர்நாடகத்தில் நடந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. 20-ந் தேதி மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 21-ந் தேதியில் இருந்து 27-ந் தேதி வரை வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் காவிரியில் தண்ணீர் திறந்துவிடும்படி சுப்ரீம் கோர்ட்டு கர்நாடகத்துக்கு உத்தரவிட்டது.இதற்கு கர்நாடகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து நேற்று முன்தினம் கர்நாடக சட்டசபையின் சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டு காவிரியில் தண்ணீர் திறப்பது இல்லை என்றும், காவிரி படுகையில் இருக்கும் 4 அணைகளில் உள்ள தண்ணீரை குடிநீருக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் முதல்-மந்திரி சித்தராமையா நேற்று பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

“21-ந் தேதி முதல் வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் 27-ந் தேதி வரை 7 நாட்களுக்கு தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்கும்படி 20-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. கர்நாடக சட்டசபையின் சிறப்பு கூட்டத்தில் காவிரி படுகையில் இருக்கும் 4 அணைகளில் உள்ள தண்ணீரை குடிநீருக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று சட்டசபையின் இரு அவைகளிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த தீர்மானத்தை சுப்ரீம் கோர்ட்டில் 26-ந் தேதி(நாளை) தாக்கல் செய்ய உள்ளோம். 20-ந் தேதி தண்ணீர் திறக்குமாறு பிறப்பித்த உத்தரவை மாற்றி அமைக்குமாறும் கோர உள்ளோம்.

கோர்ட்டு உத்தரவில், தண்ணீர் கணக்கீட்டு அளவு 27-9-2016 முடிய தண்ணீர் கணக்கீடு செய்வதாக கூறியுள்ளதை மாற்றி 2017 ஜனவரி மாதம் முடிய தண்ணீரை கணக்கீடு செய்யுமாறு கேட்போம். சுப்ரீம் கோர்ட்டின் எந்த உத்தரவையும் அவமதிக்கும் நோக்கம் எனது அரசுக்கு இல்லை.”

இவ்வாறு சித்தராமையா கடிதத்தில் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply