காலி மாவட்டத்தில் நிலநடுக்கம்;கட்டிடங்கள் அதிர்ந்தன
ஸ்ரீலங்காவின் தென் மாகாணத்திலுள்ள சில பிரதேசங்களில் சிறியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இதற்கமைய இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.45 அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அப்பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.காலி, உனவட்டுன, தல்பே ஆகிய பிரதேசங்களிலேயே இவ்வாறு சிறியளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த பிரதேசங்களிலுள்ள வீடுகளும், கட்டிடங்களும் சற்று அதிர்ந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.எவ்வாறாயினும் இந்த சிறிதளவிலான நிலநடுக்கத்தினால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply