தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது – கர்நாடக அரசு அறிவிப்பு
தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.சுப்ரீம் கோர்ட்டு காவிரியில் தமிழகத்திற்கு 3 நாட்களுக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிகளின் அவசர கூட்டத்தை அம்மாநில முதல் அமைச்சர் சித்தராமையா கூட்டினார். இன்று (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு பெங்களூரு விதான சவுதாவில் இந்த கூட்டம் நடைபெற்றது. அனைத்துக்கட்சி கூட்டத்தை தொடர்ந்து மந்திரிசபையின் அவசர கூட்டம் நடைபெற்றது.
இதையடுத்து, தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடக அரசு அறிவித்தது. டெல்லியில் நாளை இரு மாநில அரசு அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டம் நடைபெற்றதையடுத்து தண்ணீர் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply