19ஆவது சார்க் ஒத்திவைக்கப்படும் சாத்தியம்
இந்தியா உட்பட நான்கு உறுப்பு நாடுகள் பங்கேற்க மறுப்பு தெரிவித்துள்ளதால் பாகிஸ்தானில் நடைபெறவிருந்த 19-ஆவது சார்க் மாநாடு ஒத்திவைக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் எதிர்வரும் நவம்பர் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் சார்க் அமைப்பின் 19ஆவது சார்க் மாநாடு நடைபெறவிருந்தது. ஆனால் அண்மையில் இடம்பெற்ற உரி தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தானின் பங்கு இருப்பதை சுட்டிக்காட்டிய இந்தியா,மாநாட்டில்பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து பிராந்தியத்தில் வன்முறை சம்பவங்களுக்கான தூண்டுதல் நிகழ்வதை காரணம் காட்டி ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளும் மாநாட்டில் பங்கேறக்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளன.
தற்போது சார்க் அமைப்புக்கு நேபாளம் தலைமை வகித்து வருகிறது.
குறிப்பிட்ட நான்கு நாடுகளும் பங்கேற்கவியலாமையை சுட்டிக்காட்டி கடிதங்கள் அனுப்பியுள்ளன.இதை உறுதி செய்த நேபாளம் இது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. சார்க் அமைப்பின் விதிகளின் படி அங்கத்துவ நாடுகளிடையே கருத்தொற்றுமை மிகவும் முக்கியம் என்பதால், இந்த மாநாடுஒத்தி வைக்ககப்படுவதற்கோ அல்லது ரத்து செய்யப்படுவதற்கோ வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் தெரிய வருகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply