இந்தியாவின் அழைப்பை கூட்டமைப்பினர் நிராகரிப்பு
யுத்தத்தில் சிக்கியுள்ள மக்களை பாதுகாப்பது குறித்தும் இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை காணும் வழிவகைகளை கண்டறிவது குறித்தும் விரிவாக பேச, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களை புதுடில்லி வருமாறு இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் விடுத்திருந்த அழைப்பினை கூட்டமைப்பு நிராகரித்துள்ளது.
இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு உரிய சந்தர்ப்பத்தில் தீர்வு காணக் கூடிய வழிவகைகள் குறித்து ஆராய்ந்து நடவடிக்கையெடுக்கத் தவறிய இந்திய அரசாங்கம் தற்போது தேர்தலை மையமாக வைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சந்திக்கவுள்ளதாகவும் இது இந்திய அரசின் அரசியல் லாபம் தேடும் ஒரு தந்திரோபாயமெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரொருவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராசா தலைமையில் நேற்றுக் (ஏப். 09) கூடிய தேசிய கூட்டமைப்பு எம்பிக்கள் இந்த அழைப்பை நிராகரிப்பதென முடிவு செய்துள்ளதாக அறிய முடிகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply