ஜெயலலிதா உடல்நிலை அதிமுக கிளை செயலாளர் தீக்குளிப்பு
ஜெயலலிதா உடல்நிலை பற்றி சரியாக தெரியாததால் மனமுடைந்த அதிமுக கிளை செயலாளர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே புதுக்கூரபேட்டையை சேர்ந்த கூலித்தொழிலாளி கணேசன்(50), இவர் அதிமுக கிளை செயலாளராக இருந்து வருகிறார்.
இவரது மனைவி அஞ்சலை. குழந்தை இல்லை. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து தகவல் ஏதும் தெரியவில்லை என்று அக்கம்பக்கத்தினரிடம் கூறி வேதனைப்பட்ட கணேசன், நேற்று உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொண்டார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்து கணேசனை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply