வீடுகளை காலிசெய்து விட்டு பாதுகாப்பான இடத்திற்குச் செல்லவும் :புளோரிடா கவர்னர் உத்தரவு

puloridaவடக்கு அட்லாண்டிக் கடலில் உருவாகிய ‘மேத்யூ’ என்ற புயல் லத்தீன் அமெரிக்க நடானா ஹெய்தி மற்றும் டொமினிக்கன் குடியரசு நாடுகளை துவம்சம் செய்தது. அங்குள்ள மரங்கள், வீடுகளை இடித்துத் தள்ளி ஆற்றுக்குள் கொண்டுத் தள்ளியது. இந்த புயலுக்கு இதுவரை 30-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.தற்போது இந்த மேத்யூ புயல் புளோரிடாவை நோக்கி நகர்ந்து சென்று கொண்டிருக்கிறது. அமெரிக்க நேரப்படி இன்று நள்ளிரவு முதல் எந்தநேரத்திலும் புளோரிடாவை தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மக்கள் வீட்டை காலிசெய்துவிட்டு பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல அம்மாகாண கவர்னர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், மேத்யூ புயல் உங்களை கொன்றுவிடும் என்று எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து புளோரிடா கவர்னர் ரிக் ஸ்காட் கூறுகையில் ‘‘வியாழக்கிழமை காலை நிலவரப்படி மேத்யூ புயல் புளோரிடாவின் மேற்கு பால்ம் கடற்கரையில் இருந்து 215 மைல் தொலைவில் நிலை கொண்டுள்ளது. 125 மைல் வேகத்தில் வீசக்கூடிய இந்த புயல் மிகவும் ஆபத்தானது. நாம் அதற்கு வாய்ப்பு கொடுக்கக்கூடாது. நாம் ஏன் புயலோடு தாக்குதலுக்காக காத்திருக்க வேண்டும். புயல் தாக்கும்போது வெளியேற நினைத்தாலும், நம்மால் வெளியேற முடியாது. இந்த புயல் உங்களை கொன்றுவிடும். காலம் சென்ற கொண்டிருக்கிறது. காலஅவகாசம் இல்லாததால் மக்கள் உடனடியாக வீடுகளை காலிசெய்து விட்டு பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல வேண்டும்’’ என்றார்.

புளோரிடா மாநிலத்தில் சுமார் 20 லட்சம் மக்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். கடந்த 2012-ம் ஆண்டு கிழக்கு கடற்கரையில் உருவான சாண்டி புயலுக்குப் பிறகு தற்போதுதான் அதிக அளவில் மக்கள் வெளியேறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புளோரிடாவை தொடர்ந்து புயல் தெற்கு கரோலினா, வடக்கு கரோலினா, ஜார்ஜியா, விர்ஜினியா, மேரிலேண்ட் ஆகிய பகுதிகளையும் தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply