பாராளுமன்ற விவாதத்தின் போது போக்கிமோன் கோ விளையாடிய நார்வே பிரதமர்

pokemone goபோகிமோன் கோ’ வீடியோ கேம்ஸ் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான மொபைல் போன்  விளையாட்டாக திகழ்ந்து வருகிறது. கடந்த மாதம் ஜப்பானில் தொடங்கப்பட்ட போகிமோன் கோ விளையாட்டுக்கு உலகம் முழுவதும் ஏராளமான பேர் அடிமையாகி வருகின்றனர். இதனால் 15 நாடுகளில் இந்த விளையாட்டைத் தடை செய்துள்ளனர். உலகளவில் அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா, சீனா, ஈரான், மற்றும் கொரியா போன்ற நாடுகளில் போக்கிமோன் கோவுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.

 

விளையாடும் அனைவரும் அந்த கற்பனை உலகிற்கு அழைத்து செல்வது போல் அமைந்துள்ளதால் அனைவரையும் தன் வசப்படுத்தியுள்ளது இந்த போக்கிமோன் கோ.

 

இந்த நிலையில் நார்வே பிரதமர் பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்று கொண்டு இருக்கும் போது போக்கிமோன் கோ விளையாடியதாக தற்போது சர்ச்சை எழுந்து உள்ளது.

 

நார்வே பிரதமர்  எர்னா சோல் பெர்க் பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்று கொண்டு இருக்கும் போது போக்கிமோன் கோ மொபைல் ஆன் லைன் விளையாட்டை விளையாடி உள்ளார். இது அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளது.இது போல் ஆன்லைன் கேம் விளையாடுவது இவருக்கு முதல் முறையல்ல. சமீபத்தில் சுலோவாகியா சென்று இருந்த போது அதிகாரிகளை முட்டையை பிடிக்க சொன்ன விவகாரமும் நடந்து உள்ளது.

 

இதே போல் நார்வே அரசியல் வாதி ஒருவரும் வெளியுறவு  மற்றும் ராணுவ ஆலோசனை கூட்டம்  நடைபெற்று கொண்டு இருக்கும் போது போக்கிமோன் கோ.  விளையாடியதாக சர்ச்சை எழுந்து உள்ளது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply