ஜனாதிபதியின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன குழப்பத்தில் அமைச்சர்கள்
2017ம் ஆண்டு வரையில் அதிக வேக நெடுஞ்சாலை நிர்மாணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதென அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல கருத்து வெளியிட்டிருந்தார்.வருட இறுதி வரையில் நல்ல நேரம் அமையாத காரணத்தினால் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கும் நடவடிக்கை தாமதடையும் என அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.அமைச்சரின் கருத்து தொடர்பில் கடந்த நாட்களில் அதிகமாக பேசப்பட்டதோடு அரசாங்கம் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.எனினும் இது தொடர்பான தகவலை அறிந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் லக்ஷ்மன் மீது கடும் கோபம் கொண்டு திட்டித் தீர்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
நேர பிரச்சினைகள் அல்லது ஜாதக பிரச்சினைகள் காரணமாக மக்களின் பணத்தில் மேற்கொள்ளப்படுகின்ற அரசாங்கத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் ஒரு போதும் இடை நிறுத்தக்கூடாதென ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.
ஒரு வார காலப்பகுதிக்குள் தாமதிக்கப்பட்டுள்ள திட்டத்தை ஆரம்பித்து தனக்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் இந்த திடீர் முடிவு தொடர்பில் குழப்பமடைந்த அமைசச்ர், மிரிஹமவில் இருந்து குருணாகல் வரையிலான கண்டி அதிவேக வீதியின் நடவடிக்கையை அவசரமாக ஆரம்பித்து அது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு அறிவித்துள்ளார்.
ஜனாதிபதியினால் அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் செயற்பாடுகள் தொடர்பில் தீவிரமான அவதானம் செலுத்தப்படுவதாக ஜனாதிபதிக்கு நெருங்கிய தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply