சென்னை விமான நிலையத்தை ரூ.2,587 கோடியில் நவீனமாக்கும் திட்டம்: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி

CHENNAI AIRPORTசென்னை மீனம்பாக்கத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையத்தை ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் பயணிகள் உள்நாட்டு போக்குவரத்துக்கும், வெளிநாட்டு போக்குவரத்துக்கும் பயன்படுத்தி வருகிறார்கள். இதை அதிகரிக்கும் வகையில் விமான நிலையத்தை நவீனப்படுத்த விமான நிலைய மேம்பாட்டு ஆணையம் திட்டமிட்டு அதற்கான பணிகளை மேற்கொண்டது. அதன்படி ரூ.2,587 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதிக்காக விமான நிலைய மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் விண்ணப்பித்தனர். இதனை ஏற்று சென்னை விமான நிலையத்தை நவீனப்படுத்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியது. அத்துடன் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் சுற்றுப்புற பகுதி மக்களின் கருத்துகளை கேட்கவும் அறிவுறுத்தியுள்ளது.

1,301.28 ஏக்கர் பரப்பளவு கொண்ட சென்னை விமான நிலையத்தில் தற்போது உள்ள 2 பழைய முனையங்களை (2 மற்றும் 3வது டெர்மினல்) முற்றிலும் அகற்றிவிட்டு, அதற்கு பதிலாக புதிய கட்டமைப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.

புதிய கட்டமைப்பில் பன்னடுக்கு வாகன நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட உள்ளன. விமான நிலையம் நவீனமாவதன் மூலம் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply