திமுக கூட்டியுள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் பங்கேற்காது: திருமாவளவன்

thiruகாவிரி பிரச்சனை தொடர்பாக திமுக அழைப்பு விடுத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்காது என்று அக்கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.காவிரி விவகாரம் தொடர்பாக விவாதிக்க இன்று அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு திமுக அழைப்பு விடுத்திருந்தது. இதில் காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்பதாக அறிவித்துள்ளன.

பாமக, பாஜக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கவில்லை என்று தெரிவித்தன.

இந்நிலையில், இக்கூட்டத்தில் பங்கேற்பது குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை, சந்தித்த பின்னர், இன்று காலை அறிவிக்கப்படும் என்று தொல். திருமாவளவன் நேற்று தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து திமுகவின் அனைத்துக் கட்சி கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் பங்கேற்காது என்று தற்போது அறிவித்தார். இதுதொடர்பாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றையும் அவர் அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில் தங்கள் கட்சிக்கு அழைப்பு விடுத்ததற்கு அவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

திமுக அழைப்பு விடுத்துள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வது தொடர்பாக மக்கள் நல கூட்டணி தலைவர்களுடன் தான் விவாதித்தாக தெரிவித்த தொல். திருமாவளவன், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளில் நடைபெறவுள்ள சட்டமன்ற இடைத்தேர்தலை மக்கள் நலக் கூட்டணி புறக்கணிக்க முடிவு செய்துள்ளதையும் நினைவு கூர்ந்தார்.

இதனால் சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்கவுள்ள இச்சூழலில், திமுக கூட்டியுள்ள இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் தங்கள் கட்சி பங்கேற்பது தேவையற்ற அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் தாங்கள் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை என்பதை தெரிவித்துக் கொள்வதாக மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தொல். திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply