அரசுக்கும் புலிகளுக்கும் ஆதரவு தெரிவித்து நேற்று இத்தாலியில் இருதரப்பு ஆர்ப்பாட்டம்
வடக்கில் இடம்பெறும் யுத்தத்தை உடன் நிறுத்துமாறும் தமிழர் தாயக பூமியை அங்கீகரிக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனே தமிழ் மக்களின் தலைவரென்று கோஷம் எழுப்பியும் புலிகளின் ஆதரவாளர்கள் நேற்று இத்தாலி மிலோனா நகரில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இத்தாலிய நேரப்படி நேற்றுக் காலை 9.30 மணியிலிருந்து மாலை 5.00 மணி வரை இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் புலிக் கொடிகளையும் பிரபாகரனின் உருவப் படங்களையும் தாங்கியிருந்தனர்.
இதேவேளை, இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற அதே இடத்திலேயே இலங்கையைச் சேர்ந்த இன்னொரு குழுவினரும் இலங்கை அரசுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததனையும் காணக் கூடியதாவிருந்தது.
இலங்கைத் தேசியக் கொடியை ஏந்திய இவர்கள் ஜனாதிபதிக்கும் பாதுகாப்புச் செயலர், இராணுவத் தளபதி, இலங்கை அரசுக்கும் ஆதரவு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.
ஆனால் இருதரப்புக்குமிடையே எவ்வித மோதல்களும் இடம்பெறவில்லையென்றும் இவர்கள் அனைவருக்கும் இத்தாலியப் பொலிசார் பாதுகாப்பு வழங்கியதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவித்தன.
படங்களில் நீங்கள் காண்பது இருதரப்பினரின் ஆர்ப்பாட்டத்தினையே.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply