25 ஆண்டுகளில் முதல்முறையாக கியூபா மீதான ஓட்டெடுப்பை அமெரிக்கா புறக்கணித்தது: இந்தியா வரவேற்பு
அமெரிக்காவுக்கும், கியூபாவுக்கும் இடையே 50 ஆண்டுகளுக்கு மேலாக தீராப் பகைமை நிலவி வந்தது. ஆனால் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும், கியூபா அதிபர் ராவுல் காஸ்டிரோவும் 2014-ம் ஆண்டு சந்தித்து பேசி இணக்கமாகினர். இதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே மீண்டும் தூதரக உறவு மலர்ந்துள்ளது.
இந்த நிலையில் கியூபாவுக்கு எதிராக அமெரிக்கா பிறப்பித்த வர்த்தக தடையை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பான ஓட்டெடுப்பு, ஐ.நா. பொதுச்சபையில் நேற்றுமுன்தினம் நடந்தது. இதில் இந்தியா உள்பட 190 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. கிட்டத்தட்ட கருத்தொற்றுமை ஏற்பட்டது.
25 ஆண்டுகளாக இதை எதிர்த்து வந்த அமெரிக்கா, முதல் முறையாக ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
இது வரவேற்கத்தக்க முடிவு என இந்தியா உள்ளிட்ட நாடுகள் வரவேற்று கருத்து தெரிவித்துள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply