நெதர்லாந்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தியவர்கள் கைது
நெதர்லாந்து நாடாளுமன்றத்துக்கு முன்பாக கடந்த ஐந்து நாட்களாக கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்ற நிலையில், நேற்று முதல் உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்ட இளைஞர்கள் உட்பட 30 பேர் வரையில் நெதர்லாந்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை 9:30 மணியளவில் குறிப்பிட்ட இடத்திற்குப் பேரூந்துகள் சகிதம் சென்ற காவல்துறையினர், அங்கு போராட்டம் நடத்தியவர்களைக் கைது செய்து கொண்டு சென்றுள்ளனர்.கைதுசெய்தபொழுது அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் இக்கைதை எதிர்த்து கோசங்களை எழுப்பியபொழுது அம்மாணவர்களை காவற்துறையினர் தாக்கி கைதுசெய்து கொண்டு சென்றுள்ளனர். முப்பது பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply