மக்களின் அழிவைத் தவிர்க்க புலிகள் இப்போது முன்வரா விட்டால் வரலாறு அவர்களை மன்னிக்காது
வன்னியில் தங்கள் கட்டுப்பாட்டிலிருந்த நிலப்பரப்பு முழுவதையும் படையினரிடம் இழ ந்த புலிகள் இப்போது பாதுகாப்பு வலயத்துக்குள் சென்றிருக்கின்றார்கள். மோதலில் சம்பந்தப்படாத சிவிலியன்கள் மோதலால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டதே இப்பாதுகாப்பு வலயம். ஏற்கனவே புலிகள் இப்பாதுகாப்பு வலயத்துக்குள் சென்று படையினருக்கு எதிரான மோதல் நடவடிக்கையில் ஈடுபட்டதால் சிவிலியன்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இப்போது புலிகள் இயக்கத்தின் தலைவர்கள் உட்பட எஞ்சியுள்ள அனைவரும் பாதுகாப்பு வலயத்துக்குள் சென்று தங்கள் பாதுகாப்புக்காகச் சிவிலியன்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவது அச்சிவிலியன்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்திருக்கின்றது.
பாதுகாப்பு வலயத்துக்குள் புலிகள் சென்றிருப்பது யுத்தத்தில் இனியும் தாக்குப்பிடிக்க முடியாது என்ற நிலையில் தோல்வியை ஒப்புக்கொண்டதற்குச் சமன். இந்த நிலையில் மக்களைத் துன்பத்தில் ஆழ்த்தாமல் சரணடைவது தான் அவர்களுக்கு முன்னாலுள்ள ஒரே வழி. மக்களுக்கு அழிவை ஏற்படுத்தும் விதமாகச் செயற்படுவது மக்களுக்கு எதிராக யுத்தம் புரிவதற்குச் சமன் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
பாதுகாப்பு வலயத்திலிருந்து வெளியேறி அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குச் செல் வதையே அங்குள்ள சிவிலியன்கள் விரும் புகின்றார்கள். ஆனால் அவர்கள் வெளியேறப் புலிகள் விடுகின்றார்களில்லை. தடையை மீறி வெளியேறியவர்கள் மீது புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்த பல சம்பவங்கள் கடந்த நாட்களில் இடம் பெற்றிருக்கின்றன. இத் துப்பாக்கிப் பிரயோகத்தில் சிலர் இறந்திருக்கின்றார்கள். பலர் காயமடைந்திருக்கின்றார்கள்.
அரச படையினர் இப்போது பாதுகாப்பு வலயத்தைச் சுற்றிவளைத்திருக்கின்றனர். உடனடியாகப் புலிகள் சரணடைய வேண் டும் என்றும் சிவிலியன்கள் வெளியேறுவ தற்கு இடமளிக்க வேண்டும் என்றும் ஒலி பெருக்கிகள் மூலம் அறிவித்துக் கொண்டி ருக்கின்றனர். ஆனால் புலிகள் தங்கள் இறு க்கமான நிலைப்பாட்டைக் கைவிட்டதாகத் தெரியவில்லை. அவர்கள் சரணடைவ தற்கான அறிகுறிகள் தென்படவில்லை. சிவிலியன்களை வெளியேற விடாமல் தடுப்பதில் இப்போது தீவிரமாக இருப்பதாகத் தகவல்கள் வெளிவருகின்றன.
புலிகள் யுத்தத்தில் தோற்றுப்போனார்கள். அரச படையினரால் சுற்றிவளைக்கப் பட்டிருக்கின்றார்கள். அவர்கள் சரணடைய மறுத்தால் கைப்பற்றப்படுவதோ அழிக்கப்படுவதோ நிச்சயம். அது இடம்பெறுவதைச் சில தினங்களுக்குத் தள்ளிப் போடலா மேயொழிய தவிர்க்க முடியாது. தமிழ் நாட்டிலும் ஐரோப்பாவின் சில நாடுக ளிலும் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் யுத்தநிறுத்தத்தைக் கொண்டுவர முடியும் என்று புலிகள் நினைப்பார்களேயானால் அது வெறும் கற்பனை. யுத்தநிறுத்தத்து க்கு அரசாங்கம் ஒருபோதும் சம்மதிக்கப் போவதில்லை என்பதைப் புலிகள் விளங்கிக்கொண்டு செயற்படுவது தான் நல் லது. அவர்களுக்கு மாத்திரமன்றி மக்களுக்கும் அதுவே நன்மை பயக்கும்.
மக்களை மனிதக் கேடயங்களாகப் புலிகள் பயன்படுத்துகின்றார்கள். தங்கள் உயிரைப் பாதுகாப்பதற்காக மக்களின் உயிரைப் பணயம் வைக்கும் செயலாகவே இதைக் கருத வேண்டும். மக்களுக்காகவே ஆயுதம் ஏந்தியதாகக் கூறும் புலிகள் அந்த ஆயுதத்தை மக்களின் அழிவுக்காகப் பயன்படுத்தக் கூடாது. மக்களின் அழிவைத் தவிர்ப்பதற்கு இது இறுதிச் சந்தர்ப்பம். மக்களின் அழிவைத் தவிர்ப்பதற்காகச் சரணடைவதற்குப் புலிகள் இப்போது முன்வர வேண்டும். இல்லாவிட்டால் வரலாறு அவர்களை மன்னிக்காது.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply