அமைச்சர் வி.முரளிதரன் அவர்களின் மக்கள் தொடர்பாளர் ரஞ்சன் தலைமையில் நேற்று அபிவிருத்திச் சங்க கூட்டம்
அமைச்சர் பதவியேற்று பல்வேறு அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டு வரும் நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) அவர்களின் மக்கள் தொடர்புச் செயலாளர் ரஞ்சன் அவர்களினால் கிராமங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தில் முதற்க்கட்டமாக நேற்று மாலை 02.00 மணியளவில் மட்டக்களப்பு சந்திவெளியிலுள்ள சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் இணைப்பு செயலகத்தில் அபிவிருத்திக் கூட்டம் ஓன்று ஏற்ப்பாடு செய்யப்பட்டியிருந்தது.
இக் கூட்டத்தில் சந்திவெளி கிராமத்திலுள்ள வர்த்தக சங்கங்கள் , கூட்டறவு சங்கங்கள் , சைவ மங்கையர் சங்கம் , முதியோர் சங்கம் , மற்றும் கிராம முன்னேற்ற சங்கங்கள் ஆகியவை கலந்துகொண்டதோடு இக் கூட்டத்தில் சந்திவெளி கிராமத்தை முன்னேற்றுவதற்க்கான பல ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டு சங்கங்களில் நிலவும் பிரச்சனைகள் ஆரயப்பட்டன. இக் கூட்டத்தில் அமைச்சர் அவர்களின் மக்கள் தொடர்புச் செயலாளர் ரஞ்சன் அவர்கள் தலமைதாங்கியதோடு , இணைப்புச் செயலாளர் இளங்கீதன் , கோரளைப்பற்று தவிசாளர் உதயன் ஜீவதாஸ் மற்றும் கோரளைப்பற்று பிரதேச உறுப்பினர் நடராஜா ஆகியோர் இணைத்தலைமை வகித்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply