அமெரிக்க அதிபர் நாற்காலியில் அமருவது யார்? பரபரப்பான தேர்தல் முடிவு இன்று வெளியாகிறது

trumpஅமெரிக்காவின், 45வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், cilintonபுதிய அதிபராக மகுடம் சூடப் போவது, ஹிலாரியா, டொனால்டு டிரம்ப்பா என்பது இன்று தெரிய வரும்.அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம், அடுத்தாண்டு ஜனவரியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய அதிபரை தேர்தெடுப்பதற்கான தேர்தல், நேற்று நடந்தது.ஜனநாயக கட்சி சார்பில், முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி, 68, போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, பிரபல தொழில் அதிபர் டொனால்டு டிரம்ப், 70, குடியரசு கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

பல மாதங்களாக இருவரும் நாடு முழுவதும் பிரசாரம் செய்து வந்த நிலையில், அதிபர் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, இந்திய நேரப்படி நேற்று மாலை துவங்கியது. ஒவ்வொரு மாகாணங்களிலும், அதன் வசதிக்கேற்ப ஓட்டுப்பதிவு நடந்தது.

நியூஹேம்ஸ்பியர் உட்பட சில பகுதிகளில், பல மணி நேரங்கள் முன்னதாக ஓட்டுப்பதிவு துவங்கியது. கெண்டகி, இண்டியானா, நியூயார்க், வெர்ஜீனியா உள்ளிட்ட ஒன்பது மாகாணங்களில், இந்திய நேரப்படி, நேற்று மாலை, 5:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. அமெரிக்காவின் பல பகுதிகளி லும், விறு விறுப்பான ஓட்டுப்பதிவு நடந்தது. ஹிலாரி மற்றும் அவரது கணவரும், முன்னாள் அதிபருமான பில் கிளிண்டன், நியூயார்க் நகரில் ஓட்டளித்தனர்.

பல மாகாணங்களில் இன்று அதிகாலை வரை ஓட்டுப்பதிவு நடக்கும் நிலையில், சில மணிநேரங்களுக்கு பின்,ஓட்டு எண்ணிக்கை துவங்குகிறது. அதன்படி, புதிய அதிபராகப் போவது யார் என்ற நிலவரம், இன்று மாலையில் தெரிய வரும். இன்று காலையில் இருந்தே, முன்னணி நிலவரங்கள் தெரிய வரும்.

தேர்தல் முடிவுகளை, உடனுக்குடன் அறிவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன; தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள், இன்று காலையில் இருந்து வெளிவரத் துவங்கும்.

ஓட்டுப் பதிவு நாளில், தாக்குதல் நடத்தப்போவதாக, ஐ.எஸ்., பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்து இருந்ததால், அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

புதிய வரலாறு

நீண்ட அரசியல் அனுபவமும், நிர்வாகத் திறமையும் உடைய ஹிலாரி வெற்றி பெற்றால், அமெரிக்கா வில், முதன்முறையாக பெண் ஒருவர் அதிபரான வரலாறு உருவாகும்.

அதேசமயம், டிரம்ப் வெற்றி பெற்றால், அரசியலுக்கு சற்றும் தொடர்பு இல்லாத ஒருவர், தேர்தல் அறிவிக்கப்படும் சில மாதங் களுக்குமுன், தேர்தல் களத்தில் குதித்து, பலரை பின்னுக்கு தள்ளி அதிபரான வரலாறு உருவாகும்.

முக்கியத்துவம் ஏன்?

உலகின் வல்லரசான அமெரிக்காவின் ஒவ்வொரு நடவடிக்கையும், பல நாடுகளையும் பாதிக்கிறது. அந்த நாட்டின் புதியஅதிபரின் செயல்பாடுகள், கொள்கை முடிவுகள் ஆகியவை, உலகளாவிய பயங்கரவாதம், பொருளாதார அம்சங்கள், சர்வதேச அளவிலான செயல்பாடுகள் என, ஒவ்வொரு விஷயத்திலும் எதிரொலிக்கும். எனவே தான், அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவை, அனைத்து நாடுகளும் கூர்ந்து நோக்கி வருகின்றன.

அறிவிப்பு எப்போது?

அமெரிக்காவில், மக்கள் நேரடியாக, அதிபருக்கு ஓட்டளிப்பதில்லை. ‘எலெக்ட் டோரல் காலேஜ்’ எனப்படும் தேர்வு குழு சபை உறுப்பினர்களுக்கே ஓட்டளிக்கின்றனர். இவர்களின் மொத்த எண்ணிக்கை, 538; இதில், 270 உறுப்பினர்களின் ஆதரவு பெற்றவரே, அமெரிக்க அதிபராக முடியும்.

அதிபர் வேட்பாளர்களுக்கு, எத்தனை உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது என்ற விபரம் மட்டுமே இன்று வெளியாகும். தேர்வு குழு சபை உறுப்பினர்கள், டிசம்பர் 19ல் தான், அதிகாரப்பூர்வமாக கூடி, அதிபரை தேர்ந்தெடுப்பர்.

எனினும், யாருக்கு எவ்வளவு ஆதரவு உள்ளது என்பதில் இருந்து, அதிபராகப் போவது யார் என்பது தெரிய வரும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply