ஜனாதிபதியின் இரண்டாண்டு நிறைவில் புதிய அரசியலமைப்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இரண்டாண்டு நிறைவில் புதிய அரசியலமைப்பும், நாட்டிற்கான புதிய அபிவிருத்தித் திட்டமும் நடைமுறைக்கு வரும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை வெளியிட்டார்.உத்தேச புதிய அரசியலமைப்பு தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிரதமர் இப்புதிய அரசியலமைப்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதோ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதோ அல்லது பாராளுமன்றத்துடையதோ அல்லாது மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் அது அமைவது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார். புதிய தேர்தல் முறை, நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்குதல், விசேட நீதிமன்றம் மற்றும் புதிய அரசியலமைப்பு தொடர்பில் அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்தி வருகிறது.
இந்நிலையில் அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாடுகள் மீதான விமர்சனமும் குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டு வருவதை சுட்டிக்காட்டிய பிரதமர், அதிகாரப் பகிர்வு விடயத்தில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும், சகல இன மத மக்களினதும் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் வகையில் அது அமைவது முக்கியமெனவும் பிரதமர் தெரிவித்தார்.
அமரர் மாதுலுவாவே சோபித தேரரின் ஓராண்டு நிறைவு நினைவஞ்சலி நிகழ்வு நேற்று(08) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்றது.
சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர்:
அரசியலமைப்பிற்கிணங்க அதிகாரப் பகிர்வு தொடர்பில் இரு பிரதான கட்சிகள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடன் பேசி வருகின்றன. பல்வேறு தரப்பிலிருந்தும் கருத்துக்கள் பெறப்பட்டு அதற்கேற்ப செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனினும் அவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply