வங்கிகளில் பழைய 500, 1000 ரூ நோட்டுக்களை மாற்றுவது எப்படி?
இன்று முதல் இந்தியாவில் உள்ள வங்கிகளில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றித் தரப்பட்டு வருகின்றன. அதுகுறித்து பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் இவை.
வழிமுறைகள்
· வங்கிகளில் பழைய நோட்டுகளை மாற்ற முதலில் அங்கு வழங்கப்படும் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
· பூர்த்திசெய்த படிவத்துடன் அடையாள அட்டை ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.
· ஆதார், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், என்ரிகா, பான் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளில் ஒன்றை சமர்பிக்கலாம்.
· ஒருவர் அதிகபட்சமாக 4,000 ரூபாய் வரை பழைய நோட்டுக்களை கொடுத்து புதிய நோட்டுக்களை பெற்று கொள்ளலாம்.
· நவம்பர் 18 ஆம் தேதி வரை ஏ.டி.எம்களில் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 2,000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும்.
· நவம்பர் 19 ஆம் தேதியிலிருந்து இது 4,000 ரூபாயாக அதிகரிக்கப்பட உள்ளது.
· ஒரு நாளைக்கு காசோலை மூலம் 10 ஆயிரம் ரூபாய் வரை எடுக்க முடியும். ஆனால், ஒரு வாரத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க அனுமதிக்கப்படுவீர்கள்.
· காசோலை மூலம் 20 ஆயிரம் ரூபாயை எடுத்துவிட்டால் அதன் பின் ஏ.டி.எம் பயன்படுத்த முடியாது.
· வங்கிகளுக்கு நேரிடையாக செல்ல முடியாத நிலையில், உங்களுடைய ஒப்புதல் கடிதத்துடன் பிரதிநிதி ஒருவரை அனுப்பலாம்.
· வங்கியில் அந்த பிரதிநிதி, ஒப்புதல் கடிதத்துடன் அவருடைய அடையாள சான்றுகளை சமர்பிக்க வேண்டும்.
· டிசம்பர் 30 ஆம் தேதிக்குள் நோட்டுக்களை மாற்ற முடியாதவர்கள், அதன் பின், ரிசர்வ் வங்கி தெரிவிக்கும் குறிப்பிட்ட சில கிளைகளில் இந்த நோட்டுக்களை மாற்றிக் கொள்ள முடியும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply