அத் பொருட்களின் விலைகள் குறைப்பு முக்கிய வரிகள் அதிகரிப்பு
நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு — செலவுத் திட்டம் நேற்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டுக்கான வரவு — செலவு திட்டத்தை சரியாக 2 மணிக்குச் சமர்ப்பித்த அமைச்சர் ரவி கருணாநாயக்க பிற்பகல் 5.12 வரை உரையாற்றினார்.
இந்த வரவு – செலவுத் திட்டத்தில் மக்கள் நலன்சார்ந்த பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதோடு அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளன.
உள்ளூர் உற்பத்தி, வெளிநாட்டு முதலீடுகளை உள்ளடக்கிய நாட்டின் பொருளாதார அபிவிருத்தியைக் இலக்காகக் கொண்டே இந்த பட்ஜட் தயாரிக்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டுக்காக நிதியமைச்சரினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் அட்டவணையில் தரப்பட்டுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply