தனது தோல்விக்கு ஜேம்ஸ் கோமியே காரணம்: ஹிலரி
அமெரிக்க அதிபர் தேர்தலில் தனது அதிர்ச்சிகரமான தோல்விக்கு, எஃப் பி ஐ இயக்குநர் ஜேம்ஸ் கோமியின் மீது ஹிலரி குற்றம் சுமத்தியுள்ளார்.தனது மின்னஞ்சல் பயன்பாடு குறித்து தேர்தலுக்கு சற்று முன்னதாக வந்த கோமியின் புதிய விசாரணை அறிவிப்பு, தனது பிரச்சாரத்தின் வேகத்தை குறைத்தது விட்டது என கட்சியின் நிதி வழங்கியவர்களிடம் ஹிலரி தெரிவித்துள்ளார்.டொனால்ட் டிரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்காரர்கள் நான்காவது நாளாக ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.
நியூயார்க்கில் உள்ள யூனியன் சதுக்கத்திற்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்களை போலிஸார் தடுத்து நிறுத்தினர்; அந்நகரில், டிரம்ப் டவர் என அழைக்கப்படும் டிரம்பிற்கு சொந்தமான கட்டடம், டிரம்பின் வீடு மற்றும் அவரின் வர்த்தக தலைமையகம் ஆகியவற்றை நோக்கி போராட்டக்கார்ரகள் பேரணி நடத்தினர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply