இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 7 பாகிஸ்தான் படையினர் கொல்லப்பட்டதாக தகவல்

indian armyசர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதியில், இந்திய படைகளுடன் ஏற்பட்ட மோதலில் தன்னுடைய ஏழு படையினர் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.இரு நாடுகளுக்கு இடையேயான சர்ச்சைக்குரிய பள்ளத்தாக்கு பகுதிகளை பிரிக்கும் கட்டுப்பாட்டு கோட்டில் உள்ள பிம்பர் பகுதியில் இந்த மோதல் நிகழ்ந்ததாக சுருக்கமான ராணுவ அறிக்கை ஒன்று கூறுகிறது.ஞாயிறு இரவு, கட்டுப்பாட்டுக் கோட்டில் இந்திய படையினரின் அத்துமீறல்கள் காரணமாக இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்திய ராணுவத்தின் தன்னிச்சையான துப்பாக்கிச்சூட்டை தொடர்ந்து பாகிஸ்தான் படையினர் இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரில் உள்ள ஊரியில் அமைந்துள்ள ஒரு ராணுவ முகாமில் தாக்குதல் நடைபெற்றதை தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடந்து வருகிறது.

ஊரி தாக்குதல் சம்பவத்திலிருந்து, இந்திய ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 26 பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply