பிள்ளையான் உள்ளிட்ட 4 பேரினதும் விளக்கமறியல் நீடிப்பு

pillaiyanதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட, பிள்ளையான் உள்ளிட்ட 4 பேரினதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.இவர்கள் மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி எம்.பி.எம். முஹைதீன் முன்னிலையில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போதே எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப் புலனாய்வு உத்தியோகஸ்தர் எம். கலீல் ஆகியோருக்கே விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கடந்த 2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் நடைபெற்ற நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்து கொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் 11 ஆம் திகதி பிள்ளையான் உள்ளிட்ட குழுவினர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பிள்ளையானின் பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply