சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து விலகல்: ரஷ்யாவை பின்பற்றும் பிலிப்பைன்ஸ்
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், இனப்படுகொலை, மனிதருக்கு எதிரான குற்றங்கள், போர் குற்றங்கள் செய்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க 2002இல் உருவாக்கப்பட்டது. இந்த நீதிமன்றம் நெதர்லாந்தின் டென் ஹாக் நகரில் அமைந்துள்ளது. ஜூலை 2008 கணக்கெடுப்பின் படி உலகில் 106 நாடுகள் இந்நீதிமன்றத்தின் உறுப்பினராக இருக்கின்றன, ஆனால் இந்தியா, ஐக்கிய அமெரிக்கா போன்ற சில நாடுகள் இந்த அமைப்பை கண்டனம் செய்து சேரவில்லை.
இதனிடையே, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து ரஷ்யா வெளியேறுவதற்கு அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதின் உத்தரவிட்டார். நீதிமன்றம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற தவறிவிட்டது என்று புதின் குற்றச்சாட்டினார்.
இந்நிலையில், ரஷ்யாவை போல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து வெளியேறப் போவதாக பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ தெரிவித்துள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பயனற்றது என்று அவர் குற்றம்சாட்டினார்.
ஆசிய பசுபிக் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக லிமா நாட்டிற்கு புறப்படுவதற்கு முன்பு, ”சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பயனற்றவர்கள். ரஷ்யா அதில் இருந்து விலகி விட்டது. நாங்களும் அதனை பின்பற்றலாம். ஏன்? எங்களைப் போன்ற சிறிய நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply