பான் கி மூனுக்கு பிரான்ஸ் அரசின் உயரிய விருது: பிராங்கோயிஸ் ஹாலண்டே வழங்கினார்
உலகநாடுகள் அனைத்தையும் தனது ஆதிக்கத்தின்கீழ் கொண்டு வருவதற்காக போராடிய பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மாவீரன் நெப்போலியனால் 1802-ம் ஆண்டு ‘லெஜியான் ஆப் ஹானர்’ விருது உருவாக்கப்பட்டது. ‘செவாலியே’ உள்பட 5 பிரிவுகளாக அளிக்கப்படும் இந்த விருது பிரான்ஸ் நாட்டின் மிகப்பெருமைக்குரிய விருதாக மதிக்கப்பட்டு வருகிறது.
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள உலக நாடுகளிடையே கருத்தொற்றுமையை ஏற்படுத்தியமைக்காக பான் கி மூனுக்கு இந்த உயரிய விருது அளிக்கப்படுவதாக இந்த விருதினை பான் கி மூனுக்கு வழங்கி பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே புகழாரம் சூட்டினார்.
இந்த விருதினை தனக்கு அளிப்பதன் மூலம் ஐக்கியநாடுகள் சபையை பிரான்ஸ் அரசு கவுரவப்படுத்தி உள்ளதாக பான் கி மூன் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply