தீவிரவாதிகளுக்கு எதிராக மேலும் வலுவான நடவடிக்கை தேவை: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்

Obamaபாகிஸ்தானை தீவிரவாத நாடாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி அமெரிக்க பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க பாராளுமன்றத்தின் பிரதிநிதி சபை எம்.பி.க்களான குடியரசு கட்சி உறுப்பினர் டெட் போ மற்றும் ஜனநாயக கட்சி உறுப்பினர் டனா ரோஹ்ராபச்சர் ஆகியோர் இந்த மசோதாவை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மசோதாவில் குறிப்பிட்டுள்ளபடி பாகிஸ்தானை தீவிரவாத நாடாக அறிவிக்கக் கோரி வெள்ளை மாளிகைக்கு ஆன்லைன் கையெழுத்து மனு அனுப்பப்பட்டுள்ளது. இதில், 665769 பேர் கையெழுத்திட்டுள்ளனர். அந்த மனுவிற்கு பதிலளித்த வெள்ளை மாளிகை மூத்த அதிகாரி ஒருவர், பாகிஸ்தான் நாடு தனது மண்ணில் செயல்படும் தீவிரவாத குழுக்களுக்கு எதிராக மேலும் வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

“போராளி குழு மற்றும் தீவிரவாத குழுக்களுக்கு எதிரான சண்டையில் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் உயிர்த்தியாகம் செய்திருப்பதை உணரவேண்டும். அந்த சண்டைக்கு நாம் ஆதரவு அளிக்கிறோம். அதேசமயம், பாகிஸ்தான் தனது மண்ணில் உள்ள தீவிரவாத குழுக்களுக்கு எதிராக மேலும் வலுவான நடவடிக்கை எடுக்கவேண்டும். பாகிஸ்தானால் அத்தகைய நடவடிக்கையை எடுக்க முடியும்.

எந்த ஒரு நாடும், தீவிரவாதிகள் மற்றொரு நாட்டை தாக்குவதற்கு தனது பிராந்தியத்தை பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது. தீவிரவாதிகள் மற்றொரு நாட்டை தாக்குவதற்கு அனுமதிக்கக்கூடாது என்பதில் அமெரிக்க ஜனாதிபதி தெளிவாக உள்ளார். இதனை தொடர்ந்து வலியுறுத்துவோம். அதேசமயம், ஆன்லைன் கையெழுத்து மனுவில் குறிப்பிட்ட மசோதா, வரைவு நிலையிலேயே இருப்பதால் அதுபற்றி கருத்து கூற மாட்டோம்” என்று அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply