பாதை விதிமுறைகளை மீறுவோருக்கான அபராதம் 25000 வரை அதிகரிக்க வேண்டும் : ராஜித சேணாரத்ன

RAJITHAபாதை விதிமுறைகளை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டம் ஒன்று சுகாதர, சுதேசமற்றும் ஊட்டச்சத்து அமைச்சர் டாக்டர் ராஜித சேணாரத்ன தலைமையில் கடந்த நாட்களில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றது. பாடசாலை பேருந்து சாரதிகள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகளை விழிப்புணர்வூட்டும் நோக்கிலேயே இவ்வேலைத்திட்டம் இடம்பெற்றுள்ளது.இங்கு கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர் தொற்றா நோய்களினால் தற்பொழுது உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகின்றது என தெரவித்துள்ளார். தொற்றும் நோய்கள் தற்பொழுது கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றது என்பதுடன் மகப்பேற்று இறப்பு குறைந்தபட்சம் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றது எனவும் அமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார்.
தொற்றா நோய்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவது தொடர்பில் வீதி விபத்துக்களின் பங்களிப்பு அதிகரித்துச் செல்கின்றது என அமைச்சர் தெரிவித்துள்ளார். வீதியை பயன்படுத்தும் சாரதிகள் வீதி ஒழுங்குமுறை தொடர்பில எவ்வாறு கவனம் செலுத்த வேண்டு;ம் என்பது பற்றியும் வீதியை கடக்கும் போது எவ்வாறு கடக்க வேண்டும் என்பது பற்றியும் விழிப்புணர்வு இன்றி செயல்படுகின்றார்கள் என சுட்டிக்காட்டிய அமைச்சர் வீதி ஒழுங்கு முறையை மேலும் கட்டுப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இம்முறை வரவு செலவு திட்டத்தில் வீதி ஒழுங்குமுறையை மீறுவோருக்காக அபராதம் 2500 வரை அதிகரித்தமை தொடர்பில் பேருந்து சாரதிகள் கடுமையான எதிர்பபை தெரிவித்திருந்தனர். இருப்பினும் எனது தனிப்பட்ட கருத்துகளுக்கமைய இந்த அபராதம் ரூபா 25,000 வரை அதிகரிக்க வேண்டும் அமை

ச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். அபராதம் அதிகரிக்கப்பட்டதனால், சட்டத்தை மீறும் சாரதிகள் சட்டத்தை மதிக்கும் அனைவரின் நன்மைக்காகவே என ராஜித சேணாரத்ன தெரிவித்துள்ளார்.
தற்பொழுது 48 மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ளதுடன் இதற்குமுன் மருந்துகளுக்கான செலவு ரூபா 4250 மில்லியன் பணம் தற்பொழுது 1025 மில்லியன் வரை குறைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply