கனேடிய பாதுகாப்பு ஆலோசகர் யாழ் விஜயம்
விடுதலைப் புலிகளுக்கும், அரசாங்கப் படைகளுக்கும் இடையில் வடபகுதியில் கடும் மோதல்கள் நடைபெற்றுவரும் நிலையில் கனேடிய பாதுகாப்பு ஆலோசகர் கேணல் ரிச்சட் ரேயர் பெர்பைட் யாழ் குடாநாட்டுக்கு விஜயம் செய்துள்ளார்.
யாழ் குடாநாட்டில் அரசாங்கப் படைகளால் முன்னெடுக்கப்படும் மனிதநேயப் பணிகள் குறித்து அவர் நேரில் கண்டறிந்துகொண்டதாகத் தெரியவருகிறது. ஏ௯ வீதி மூடப்பட்டதைத் தொடர்ந்து யாழ் குடாநாட்டு மக்களின் நலன்புரி விடயங்களை அரசாங்கப் படைகள் எவ்வாறு கையாழ்கின்றன என்பதை, யாழ் மாவட்டத்துக்கான கட்டளைத் தளபதி மேஜர் ஜென்ரல் சந்திரசிறி, கனேடிய பாதுகாப்பு ஆலோசகருக்கு விளக்கிக் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இராணுவத்தினரால் பொது மக்களுக்கு வழங்கப்படும் நிவாரண உதவிகள், மருத்துவ சேவைகள் போன்றன குறித்து மேஜர் ஜென்ரல் சந்திரசிறி விளக்கமளித்ததாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த கனேடிய பாதுகாப்பு ஆலோசகர் யாழ் போதனா வைத்தியசாலைக்குச் சென்று வெளிநோயளர் பிரிவு உள்ளிட்ட பகுதிகளைப் பார்வையிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இலங்கை இராணுவத் தளபதி லெப்டினட் ஜென்ரல் சரத் பொன்சேகா வன்னிக்கு நேற்று சனிக்கிழமை விஜயம் மேற்கொண்டிருந்தார். வன்னி முன்னரங்கப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் இராணுவ நடவடிக்கைகளின் பிந்திய நிலவரங்களைக் கட்டறியும் நோக்கில் வன்னி சென்றிருந்த இராணுவத் தளபதி, அங்குள்ள இராணுவ உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply