இலங்கை வாழ் கிறிஸ்தவ மக்களுக்கு இவ்வருட உயிர்த்த நாள் முக்கியமானது உயிர்த்தநாள் வாழ்த்துச் செய்தியில்: ஜனாதிபதி
இயேசு நாதர் உயிர்த்தநாள் பண்டிகை கிறிஸ்தவப் பஞ்சாங்கத்தின் மிக முக்கியமான பண்டிகையாக கருதப்படுகின்றது. இது மனித இனத்திற்கு நம்பிக் கையைக் கொண்டுவரும் புத்தெழுச்சியையும் மறுமலர்ச்சியையும் குறித்து நிற்கின்றது. இவ்விசேட பண்டிகைத்தினத்தில் உல கெங்கிலும் பரந்துவாழும் கிறிஸ்தவ மக்கள் கிறிஸ்தவப் போதனைகளின் மிக அடிப் படை அம்சங்களான அன்பு, கருணை, சகிப்புத்தன்மை மற்றும் புரிந்துணர்வு என்பவற்றின் ஆழ்ந்த பொருளில் தங்களது கவனங்களைக் குவிக்கின்றனர்.
எமது இலங்கை தாய் நாட்டில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு இங்கு வாழும் எல்லா சமூகங்கள் மத்தியிலும் சமாதானம், புரிந்துணர்வு என்பன ஏற்பட்டுவரும் ஒரு சூழலில் இவ்வருட உயிர்த்தநாள் பண்டிகை இலங்கை வாழ் கிறிஸ்தவ மக்களுக்கு மிக முக்கியமான ஒரு நாளாக அமைகின்றது. கிறிஸ்தவப் போதனைகளின் மூலம் ஏற்படுத்தப்படும் அன்புணர்வு எமது மக்கள் மத்தியில் நம்பிக்கையையும் புரிந்துணர்வையும் கட்டியெழுப்ப உதவவேண்டும்.
அந்த அன்பும் கருணையும் இப்பூவுலகில் எம்மோடு சேர்ந்து வாழும் எல்லா உயிரினங்களையும் சென்றடையவேண்டும் என்பதோடு அது நாம் எல்லோரும் எமது வாழ்வுக்காக சார்ந்திருக்கும் இயற்கையின் கொடைகளையும் சென்றடைய வேண்டும்.இவ்வருட உயிர்த்த நாள் பண்டிகை இலங்கைவாழ் சகல கிறிஸ்தவ மக்களுக்கும் மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த பண்டிகையாக அமைய வாழ்த்துக்கின்றேன்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply