வடகொரியா மீது பொருளாதார தடை: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நாளை வாக்கெடுப்பு
ஆசிய நாடுகளில் ஒன்றான வடகொரியா அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு, அணு ஆயுதங்களை நீண்ட தூரம் சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணைகள் ஆகியவற்றை அவ்வப்போது சோதனை நடத்தி வருகிறது. கடைசியாக கடந்த செப்டம்பர் 9-ம் தேதி வடகொரியா மிகப்பெரிய அணு ஆயுத சோதனை சோதனை நடத்தியது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கட்டுப்பாட்டை மீறி வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் நடந்துகொள்வதால் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளின் எதிர்ப்பையும் சந்தித்து வருகிறார்.
இந்நிலையில், வடகொரியா மீது புதிய பொருளாதார தடை விதிப்பது தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நாளை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தின் மீது இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, சீனா, பிரிட்டன், ரஷ்யா மற்றும் பிரான்ஸ் ஆகிய 5 நாடுகளுக்கு வீட்டோ அதிகாரம் உள்ளது. பாதுகாப்பு கவுன்சில் உள்ள 15 நாடுகளுக்கும் தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வடகொரியா மீது கடந்த 2006-ம் ஆண்டு முதல் பல்வேறு பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply