அமெரிக்க பல்கலைக்கழகத்தில் சோமாலியா மாணவர் சுட்டுக்கொலை

usaஅமெரிக்காவின் ஒகியோ மாகாணத்தின் கொலம்பியாவில் ஒனியோ மாநில பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு 60 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். இந்த நிலையில் நேற்று பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு கார் அதிவேகமாக வந்து நின்றது. அதை தொடர்ந்து அதில் இருந்து இறங்கிய ஒரு மர்மநபர் தான் வைத்திருந்த பெரிய கத்தியால் அங்கு நின்று கொண்டிருந்தவர்களை சரமாரியாக குத்தி சாய்த்தார். அதில் 11 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆவர்.

இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரி ஆலன் ஹோரூஜ்கோ அந்த நபரை துப்பாக்கியால் சுட்டார்.

இதனால் குண்டு காயம் பட்ட அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். விசாரணையில் அவரது பெயர் அப்துல் ரசாக் அலி அர்டான் (18) என தெரிய வந்தது.

இவர் அதே ஒகியோ பல்கலைக்கழக மாணவர் ஆவார். சோமாலியாவை சேர்ந்த இவர் அகதியாக அமெரிக்காவில் தங்கி இருந்தார்.

இத்தாக்குதல் தீவிரவாதிகளின் தூண்டுதல் பேரில் நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். ஏனெனில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் தங்கள் ஆதரவாளர்களுக்கு சமீபத்தில் ஒரு உத்தரவு பிறப்பித்தனர். அதில் காரை ஏற்றியும், கத்தியாலும் மற்றும் கிடைக்கும் ஆயுதங்கள் மூலமும் தாக்குதல் நடத்தும்படி தெரிவித்திருந்தனர்.

சமீபத்தில் நியூயார்க்கில் நடந்த நன்றி அறிவிப்பு விழாவில் கார் மூலம் மோதி தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply